கடந்து 1ம் தேதி முதல் மத்திய அரசின் 3குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்து செயல்பட்டு வருகிறது. இதனை கண்டித்து இந்தியா முழுவதும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்திலும், திருச்சியிலும் பல்வேறு கட்சியினர் வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக இன்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் திருச்சி காஜாமலையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியின் முன்பு மாணவ மாணவிகள் புதிய சட்ட திருத்தங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments