திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவராக கடந்த 10 வருடகாலமாக வேணு சீனிவாசன் இருந்த நிலையில் அவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் திருக்கோயில் நியமிக்கப்படும் அறங்காவலர்கள் உள்ளூரை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், திருக்கோவில் தற்போது ஏற்பட்டுள்ள நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவிலினுள் நடைபெறும் கொள்கையை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருக்கோயில் பணியாளர்கள் அல்லது ஒரு தனி நபரிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு பணியாற்றி வரும் நபர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும், பூஜா காலங்கள், உள்துறை நிர்வாகம் ஆகியவை மரபுமாறாது சுவாமி இராமானுஜர் ஆணைப்படி நடைபெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரங்கம் பாதுகாப்பு பேரவையினர் ஶ்ரீரங்கம் வெள்ளைக்கோபுரம் முன்பு கோரிக்கை பாதகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஶ்ரீரங்கம் அறங்காவலர் குழுத்தலைவராக மீண்டும் வேணு சீனிவாசன் நியமிக்கப்பட உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவலால் அப்பகுதி மக்களிடையே எதிர்ப்பு உருவாகி உள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
Comments