திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 30வது வார்டு ராஜீவ் காந்தி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் குடியிருப்புக்கு மிக அருகில் கல்லறை தோட்டம் அமைய இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
ராஜீவ் காந்தி நகரின் பின்புறமுள்ள விளை நிலத்தை பிளாட்போட்டு விற்பனை செய்வதற்காக 150 அடிக்கு மேல் தீண்டாமை சுவர் கட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேலகல்கண்டார் கோட்டை மாநகராட்சி அலுவலகம் முன்பு சமாதி கட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments