கடந்த சில நாட்களுக்கு முன்பு அறம் நாடு என்ற youtube சேனலில் குற்ற சாதி என்ற தலைப்பில் முன்னாள் பத்திரிகையாளர் பாண்டியன் என்பவர் ஒட்டு மொத்த குறவர் சமுதாயமும் கொலைகாரர்கள் எனவும், கொள்ளைக்காரர்கள் எனவும் இழிவுப்படுத்திப் பேசி உள்ளார்.
இதனை கண்டித்து குறிஞ்சி நில மக்கள் கழகம் சார்பில் திருச்சி மாவட்டம் சமயபுரம் நாலு ரோட்டில் மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் முன்னாள் பத்திரிகையாளர் பாண்டியனை கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments