Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சூப்பர் ஸ்டார்ருடன் நடிக்க ஆசை – திருச்சி கதாநாயகி பேட்டி

சமீபத்தில் இயக்குநர் இளன் இயக்கத்தில், நடிகர் கவின் கதாநாயகனாக நடித்து வெளியான படம் “ஸ்டார்”. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பிரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது சினிமா பட அனுபவம் குறித்து பேசினார். 

அதில் கூறுகையில்… ரைஸ் ஈஸ்ட் எண்டர்மெயின்ட், ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சார்பில், பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் கவின் ஹீரோவாகவும், பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாகவும் நடித்து வெளிவந்துள்ள “ஸ்டார்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவுடன் சிறப்பாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இளன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். 

இந்த படத்திற்கு அடுத்து தெலுங்கில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சிறு வயதில் நடிகர் விஜயை மிகவும் பிடித்தாலும் தற்போது விஜய் சேதுபதி நடிப்பை விரும்புகிறேன் என தெரிவித்தார். பெண்களுக்கு முக்கியம் தரும் பாத்திரங்களில் நடிக்க விரும்பினாலும் இயக்குனர்கள் எதிர்பார்ப்பிற்கு நடிப்பேன். நடிகை திரிஷாவின் நடிப்பு மிகவும் பிடிக்கும். சிறு வயதில் பரத நாட்டியம் கற்றுக் கொண்டது சினிமாவுக்கு உதவிகரமாக உள்ளது. 

விளம்பர படத்தில் நடித்ததை தொடர்ந்து இளன் இயக்கத்தில் இந்த பட வாய்ப்பு கிடைத்தது. மேலும் தமிழ்படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. சினிமா பெரிய கடல், அதில் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் சிறந்த கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன். ரஜினியுடன் நடிப்பதற்கு ஆவலாக இருக்கிறேன். சென்னையில் பிறந்து திருச்சியில் தான் வளர்ந்தேன். பள்ளி படிப்பையும் கல்லூரிப் படிப்பை திருச்சியில் படித்தேன்.

திருச்சி என்ஐடியில் படித்து பொறியியல் பட்டம் பெற்றாலும் தொடர்ந்து நடிப்பதை விரும்புகிறேன். எனது முன்னேற்றத்திற்கு பெற்றோர்கள் முக்கிய காரணம் என்றார். இந்த பேட்டியின் போது நடிகை பிரீத்தி முகுந்தன் தாயார் தீபா உடன் இருந்தார். இவரது பெற்றோர்கள் முகுந்தன், தீபா இருவரும் பிரபலமான மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *