திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத 2 வது வெள்ளி கிழமையில் அம்மனை தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து பக்தி பரவசம் அடைந்தனர்.
ஆடி மாதத்தில் சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் அம்மன் சக்திக்குள் சிவன் சக்தி அடக்கமாகி விடும். பக்தர்கள் வேண்டியதனை நிறைவேற்றும் சமயபுரம் மாரியம்மனுக்கு 200 லிட்டருக்கும் மேற்பட்ட பாலில் பாலாபிஷேகம் நடைப்பெற்றது.
மேலும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக பக்தர்கள் தீச்சட்டி ஏந்துதல், கரும்பு தொட்டில் தூக்குதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திகடன்களை செலுத்தினர்.
சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து பக்தி பரவசம் அடைந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
Comments