திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் சிறப்புமிக்கது.
கடந்த ஏப்ரல் 23-ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கிய திருவிழாவில் நேற்று (14.05.2023) காலையில் பால்குட விழா நடைபெற்றது. இன்று (15.05.2023) காலையில் பொதுமக்கள் காலையிலிருந்து நேர்த்திக்கடனாக பொங்கல் வைத்தனர், மேலும் கிடா வெட்டுதல், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதேபோல் குழந்தை வரம் வேண்டுபவர்கள் கரும்புத்தொட்டில் கட்டிவந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் வேண்டுதலுக்காக கரும்புள்ளி – செம்புள்ளி குத்தி குழந்தைகள், பொதுமக்கள் நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.
இன்று மாலையில் வேடபரி என்னும் குதிரைத்தேரில் சாமி ஊர்வலம் நடைபெறுகிறது. இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பேடபரி நிகழ்ச்சியை காண வருகின்றனர். திருவிழாவையொட்டி டி.எஸ்.பி ராமநாதன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

13 Jun, 2025
388
15 May, 2023










Comments