ஆடு மாடுகளுக்கு கூட கணக்கெடுப்பு உள்ள நிலையில் ஒபிசி பிரிவினருக்கு உரிய கணக்கெடுப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து எருமை, காளை, மாடு, பன்றி, நாய் உள்ளிட்ட விலங்குகளின் புகைப்படங்களை ஏந்தியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
OBC-ல் DNT மக்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்க கோரியும், விவசாயத்திற்கு உள்ள இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது என்றும், சுற்றுசூழல்துறை விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும்,
60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ஓய்வூதியம் ரூ. 5000/- வழங்க வேண்டும், காவிரி – அய்யாறு – உப்பாறு திட்டத்திற்கு நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
Comments