திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகியின் இல்ல திருமணத்திற்கு வருகை தந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…. கருத்துக்கணிப்பில் மீண்டும் மோடி ஆட்சியமையும் என கூறப்படுகிறது. 3வது முறை மோடி ஆட்சிக்கு வருவார் என்பது அன்றே தெரியும்.
தமிழ்நாட்டில் மாற்றம் உண்டாகுமா என்ற கேள்விக்கு…. 4ம் தேதி எல்லாம் தெரிந்து விடும். அதுக்கு பிறகு உண்மை என்ன உங்களுக்கு தெரிந்து விடும். கருத்துக்கணிப்பின்படி அதிமுக எதிர்பார்த்த தொகுதியில் கிடைக்கவில்லை தலைமையில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு….. தேர்தல் முடிந்தவுடன் அதைப் பற்றி பேசலாம் இந்த நேரத்தில் கருத்துக்களை பேச முடியாது. அதிமுக உங்கள் கட்டுப்பாட்டில் வருமா என்ற கேள்விக்கு… அம்மாவின் தொண்டர்களை எல்லாரையும் ஒருங்கிணைக்க வேண்டுவது தான் என்னுடைய நம்பிக்கை
கடைசி கட்டமாக அரசியலில் ஆயுதமாக ஆன்மீகத்தை பயன்படுத்துகிறார்களா என்ற கேள்விக்கு…. நான் எல்லா கோயிலுக்கு செல்வேன். மற்ற தலைவர்கள் கோவிலுக்கு செல்வது பற்றி பேசுவது மரியாதையாக இருக்காது. ஓபிஎஸ் அணியில் கருத்து மாறுபாடு உள்ளது என்ற கேள்விக்கு… நான்காம் தேதிக்கு பிறகு எல்லாம் தெரியும் என தெரிவித்தார்.
Comments