மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தித்த டிடிவி தினகரன்….. பழனிசாமி செய்த ஊழல்கள், தவறுகளால் திமுகவுக்கு தமிழக மக்கள் ஓட்டுப்போட்டனர். இப்போது, திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என வருந்திக் கொண்டிருக்கின்றனர். திமுக அரசு அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறை வேற்றவில்லை.
சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. விலைவாசி உயர்வு இறக்கை கட்டி பறக்கிறது. எப்போது சட்டசபை தேர்தல் வந்தாலும் இந்த ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தியாக அமமுக வரும் என தமிழக மக்கள் உறுதியாக ஆதரிப்பார்கள். பாஜக கூட்டணியிலோ அல்லது தனித்தோ அமமுக போட்டியிடும்.
பன்னீர்செல்வம் எனது பழைய நண்பர். அவர் தனித்து முடிவு எடுத்தாலும் நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவோம். அதிமுகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என 90 சதவிகித அமமுகவினர் விரும்புகின்றனர். அதிமுகவுடன் பன்னீர் கூட்டணி சேர்ந்தாலும் நாங்கள் சேர மாட்டோம். தனியாகவே போட்டியிடுவோம்.
தமிழகத்தில் தீண்டாமை, ஜாதி, சமய வேறுபாடு இல்லை. அங்கொன்றும், இங்கொன்றுமான செயல்பாடுகளை வைத்து, ‘பட்டியலின பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை. இதுதான் சமூக நீதியா?’ என கவர்னர் கூறுவது தவறு. காவிரி பிரச்னைக்காக கர்நாடகாவில் வன்முறையை கையில் எடுக்கிறார்கள். கர்நாடகாவில் நடக்கும் சம்பவங்கள் ஜனநாயகத்துக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் நல்லதல்ல. சோனியாவிடம் பேசி, நியாயமான முறையில் கர்நாடகா அரசை நடந்து கொள்ள வைக்க தமிழக முதல்வரால் முடியவில்லை என்றார்.
Comments