Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி குவைத் இடையே மீண்டும் நேரடி விமான சேவை இன்றுமுதல் தொடக்கம்

இன்று முதல் திருச்சி, குவைத் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express) அறிவித்துள்ளது. அதன்படி, மே மாதத்தின் வாரத்தில் செவ்வாய்கிழமைகளில் மட்டும் இரு மார்க்கத்திலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையை வழங்கவுள்ளது.

 திருச்சியில் இருந்து மதியம் 12.50 PM மணிக்கு புறப்படும் IX 693 என்ற விமானம், மாலை 04.10 PM மணிக்கு குவைத் விமான நிலையத்தை சென்றடையும். அதேபோல், குவைத்தில் இருந்து மாலை 05.10 PM மணிக்கு புறப்படும் IX 694 என்ற விமானம் நள்ளிரவு 12.35 AM மணியளவில் திருச்சியை வந்தடையும். இந்த வழித்தட விமான பயணச் சேவைக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கியுள்ளது.

விமான பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/enஎன்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 திருச்சி, குவைத் இடையே கூடுதல் விமான சேவையாக வரும் ஜூன் மாதம் 25 ஆம் தேதி முதல் வாரந்தோரும் சனிக்கிழமைகளில் விமான சேவையை வழங்கவுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *