Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

உதவி ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்கள் பணிநீக்கம் – திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உட்கோட்ட அளவில் தனிப்படைகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி மணப்பாறை உட்கோட்டத்திற்கு உதவி ஆய்வாளார் லியோனி ரஞ்சித்குமார், புத்தாநத்தம் காவல் நிலைய காவலர்-1667 வீரபாண்டி தலைமையில் & வையம்பட்டி காவல்நிலைய காவலர் -1787 ஷாகுல் ஹமீது மற்றும் மணப்பாறை காவல் நிலைய காவலர்-1706 மணிகண்டன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கபட்டு இருந்தது.

மேற்படி தனிப்படையினர் கடந்த, (09.05.2024) அன்று காலை 10:30 மணியளவில் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னகோனார்பட்டியில் சிறப்பு தணிக்கையில் ஈடுபட்டபோது, அங்கு சட்டவிரோதமாக ஏர் கன் (Air Gun) ஒன்றினை வைத்துக்கொண்டு பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்த 1) சதாசிவம் (28). S/o சாமிகண்ணு, கல்லி அடைக்கம்பட்டி. புதுக்கோட்டை, 2) ராமசாமி (25). S/o சுப்ரமணி. கல்லி அடைக்கம்பட்டி. புதுக்கோட்டை. 3) நாகராஜ் (33), S/o சுப்ரமணி, மலைக்குடிப்பட்டி, புதுக்கோட்டை ஆகியோர்களை தனிப்படையினர் பிடித்து விசாரித்தனர்.

விசாரணைக்குப் பிறகு போலீஸார் வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக, அவர்களிடம் ஒரு லட்சம் பணம் கேட்டுள்ளனர். மேற்படி பணத்தினை வளநாடு கைகாட்டியில் உள்ள ஏரிக்கரைக்கு அருகில் அதே நாளில் சுமார் 15:30 மணி அளவில் மேற்கண்ட சதாசிவம் என்பவரின் உறவினர் விஜயகுமார் மூலம் தனிப்படையினர் பணம் பெற்றுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண். 9487464651 என்ற எண்ணிற்கு தகவல் கிடைத்ததின் பெயரில், மேற்கண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் அவர்களுக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

மேற்படி சம்பவம் தொடர்பாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் விசாரணை மேற்கொண்டு குற்றச்சாட்டை உறுதிசெய்ததின் அடிப்படையில் அவர்கள் மீது 3(பி)ன் கீழ் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், உதவி ஆய்வாளர் லியோனி ரஞ்சித்குமார் உட்பட மூன்று காவலர்களையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணிநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற குற்றசெயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *