திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் சாலை பகுதியில் உள்ள செல்லாயி அம்மன் கோவில் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. அதிகாலை கஞ்சா போதையில் இருந்த ஏழு பேர் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் ராஜேஷ், மாதவன், எபி ஆகிய மூவருக்கு அரிவாளாலால் வெட்டுப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வெங்கடேஷ், ஹரி, அஜித்குமார், விஜயகுமார் உள்ளிட்ட ஏழு பேரை
ஸ்ரீரங்கம் காவல் துறையினர் தேடி வருகின்றனர். காயமடைந்த மூன்று பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments