திருச்சி தென்னூர் அண்ணாநகர் முதல் தெரு மற்றும் இரண்டாவது தெருவில் மழைநீர் வடிகால் கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதனால் 10 மீட்டருக்கு ஒரு இடம், 20 மீட்டர் ஒரு இடம் என ஆங்காங்கே விட்டு கட்டப்பட்டுள்ளது.
இதனால் கழிவு நீரில் கொசு தேங்கி கொசு முட்டை உற்பத்தி ஆகும் அபாயம் உள்ளது. சமீபகாலமாக குடிநீரில் கழிவுநீர் கலந்து பல பகுதிகளில் மஞ்சள் காமாலை தொற்று நோயை உருவாக்குகிறது. இதில் தென்னூரும் அடங்கும். மீண்டும் போதிய கவனமின்மை காரணமாக பொதுமக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள்.
மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகமும் கூடுதல் கவனம் செலுத்தி வார்டு எண் 28 சுகாதார சீர்கேட்டை சீரமைத்து தர வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments