தேசிய தொழிற் பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் “மாவட்ட தொழிற்பழகுநர் மேளா” தொழிற் பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம், எதிர்வரும் 11.10.2021 திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் திருச்சி மாவட்டத்தை
சார்ந்த அரசு மற்றும் முன்னனனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இம்முகாமில் கலந்து கொண்டு ஒராண்டு தொழிற் பழகுநர் நியமன ஆணை தொழிற் பழகுநர்களுக்கு பயிற்சிகாலத்தில் மாதம் ரூ.7000/-முதல் ரூ.9000/-வரை உதவித் தொகை வழங்கப்படும்.
எனவே ஐடிஐ முடித்து தேர்ச்சி பெற்ற, 8ம் வகுப்பு, 10ம்வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவமாணவிகள் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நிரந்தர வேலை வாய்ப்பினை பெறறு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பு : கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும்
அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments