திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை, வங்காள தேசம் நைஜீரியா, பாகிஸ்தான் ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடைய வழக்கு முடிவடைந்தாலும் சொந்த நாட்டிற்கு அனுப்பாமல் முகாமிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் 109 அகதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50க்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமிற்கு சென்ற திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அகதிகளை நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும் இவர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசிடம் தெரிவிப்பதாகவும், விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW
Comments