தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு நாளை (18.06.2023) அன்று வருகை தரவுள்ளதாலும்,
தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்வதாலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பயணிக்கும் வழித்தடங்களில் பாதுகாப்பு காரணம் கருதி (18.06.2023) அன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments