துபாய் நாட்டின் பழமையான பகுதிகளில் ஒன்றான டைரா பகுதி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் தாயகமாக உள்ளது. இங்கு பிரிட்ஜ் முரர் என்ற இடத்தில் உள்ள ஆள்காலஜி சாலையில் ஐந்து மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் இருந்து வந்தது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியர்கள் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி இருந்தனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நான்காவது தளத்தில் இருந்த 26 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ராமராஜபுரம் பகுதியை சேர்ந்த பள்ளிவாசல் தெரு இமாம் காசிம் மற்றும் அப்துல் காதர் ஆகிய இருவரும் என்பவரும் உயிரிழந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இவர்களின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சியை மேற்கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அவர்கள் உடல் கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ஆர்டிஓ தவசெல்வம், திருச்சி கிழக்கு வட்டாட்சியர் கனகரத்தினம், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் தேவி, உதவி ஆணையர் சுரேஷ்குமார்,
கே.கே.நகர் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அவர்களது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள அவர்களது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments