தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நாளை மறுநாள் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான மறு புத்தாக்க பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி நேரில் சென்று பார்வையிட்டார். முதலில் மணப்பாறை லட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மன்னார்புரம் செங்குளம் காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையம், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி அரசு ஆதி திராவிடர் நலத்துவக்கப்பள்ளி பெரியமிளகுபாறையில் வாக்குச்சாவடி மையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும் மணப்பாறையில் இருந்து குளித்தலை செல்லும் வழியில் பறக்கும் படை குழுவினர் வாகனங்களை சோதனை செய்து வருவதையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திருச்சி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் மற்றும் திருச்சி கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர் .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
Comments