திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் மேம்பாலத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று மோதியது. இதில் நிலைத்தடுமாறிய இருசக்கர வாகனத்தில் சென்றவர் அதே திசையில் சென்ற அரசு வாகனத்தில் மோதி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
தேசிய நெடுஞ்சாலையில் நொடி பொழுதில் நடந்த இந்த விபத்தினால் அதே வழியில் வந்த தனியார் பள்ளி பேருந்து, மோட்டார் வாகன விபத்து காப்பீடு கோருதல் மாவட்ட நீதிபதி வாகனம், மற்றொரு கார் மற்றும் லாரி உள்ளிட்ட 4 வாகனம் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தினால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்த பள்ளி மாணவர்களை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments