கொரோனா தொற்று 2ம் அலையை வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கடைகள் திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நுகர்வோருக்கு நாள்தோறும் காய்கறிகள் மற்றும் பழங்கள் தடையின்றி கிடைத்திருப்பதாக பொருட்டு நடமாடும் வாகனங்கள் மூலம் நகர்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வாகனங்கள் மாவட்ட அளவில் அனைத்து பகுதிகளுக்கு சென்று நுகர்வோருக்கு விநியோகம் செய்வதை கண்காணித்திடும் வகையில் கட்டுப்பாட்டு அறை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறையில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், மாநகராட்சி, உள்ளாட்சி அலுவலர்கள் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களுக்கு நடமாடும் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் வாகனங்களின் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் மற்றும் இன்னல்களை உடனுக்குடன் களைவதற்காகவும்,
நுகர்வோர்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் நடமாட்டும் வண்டிகள் மூலம் தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி விநியோகம் செய்திட நடவடிக்கை எடுப்பார்கள். எனவே திருச்சி மாவட்ட நுகர்வோர்கள் இந்த கட்டுப்பாட்டு தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
கட்டுப்பாட்டு தொலைபேசி பேசி எண் : 0431- 2461265.
கட்டுப்பாட்டு அறை செயல்படும் நேரம் : காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
Comments