திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை வஉசி நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் நவீன்குமார் (30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அதேபோல் ஆதிகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்கிற கலைபுலி ராஜா. இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜா தனது நண்பர்களிடம் இனி நவீன்குமாருடன் எந்த தொடர்பும் யாரும் வைத்துக்கொள்ளக்கூடாது என கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று ராஜா மற்றும் நவீன்குமார் இவர்களின் நண்பருக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இருவரையும் சமாதானப்படுத்தி வைப்பதற்காக நவீனகுமாரை பிறந்தநாள் விழாவிற்கு அழைத்துள்ளனர். இதில் நவீன்குமார், ராஜா மற்றும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு, ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நவீன்குமாரை சரமாரியாக அறிவாளால் வெட்டி சாய்த்து உள்ளனர். இதில் நவீன்குமார் உயிரிழந்து விட்டார்.
இதனை தொடர்ந்து நண்பரை வெட்டிய கலைபுலி ராஜாவை பிடிப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி தனிப்படை அமைக்கப்பட்ட தேடி வந்தனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கலைபுலி ராஜா திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள வனப்பகுதியில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்த தனிப்படை போலீசார் வனப்பகுதியில் கலைபுலி ராஜாவை பிடிக்கும் முயன்ற போது எதிர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் கலைபுலி ராஜா மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் கலைபுலி ராஜா காலில் குண்டு பாய்ந்து தற்பொழுது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments