தீபாவளியை முன்னிட்டு பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து சொந்த ஊருக்கும் பல ஆயிரம் மக்கள் பயணம் செய்வர். அவர்கள் பயணம் செய்ய ஏதுவாக தமிழக அரசின் சார்பில் அதிக அளவிலான பேருந்துகள் இயக்கப்படுவது மற்றும் பேருந்து டிக்கெட் விலைகளை முறைப்படுத்துவது என நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தென்மண்டல ரயில்வே நிர்வாகம் திருநெல்வேலியில் இருந்து சிவகாசி, மதுரை, திருச்சி வழியாக தாம்பரம் செல்வதற்கு சிறப்பு ரயிலை இயக்கவுள்ளது.
நவம்பர் 3, ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணியளவில் கிளம்பவுள்ள இந்த ரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்புக்கு இரவு 11:05 மணிக்கு வந்தடையும், பின்பு 11:10 மணிக்கு கிளம்பு தாம்பரத்திற்கு அதிகாலை 04:10 மணியளவில் சென்றடையும் என ரயில்வே நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Train No.06003 என்ற இந்த ரயில் பயணத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளவும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments