திருவெறும்பூர் தொகுதி, துவாக்குடி நகரத்தில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீதிவீதியாக நடந்து தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
திருவெறும்பூர் தொகுதி திமுக கட்சி வேட்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடுகின்றார் . திருவெறும்பூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகரத்தில் உள்ள வார்டு 1 முதல் 6 வரையுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து “உதயசூரியன் சின்னத்திற்கு” வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் .
உடன் நகர செயலாளர் இ. காயாம்பு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் பொன் முருகேசன், மதிமுகவை சேர்ந்த பாலுசாமி, திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை திலீபன், ரமேஷ் உப்பட மதசார்பற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments