தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் திமுக வேட்பாளரை ஆதரித்து சென்னையில் பிரச்சாரம் செய்த திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பு குறித்து தரகுறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆ.ராசாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயம் முன்பு மேலசிந்தாமணியைச் சேர்ந்த கங்காதரன் என்ற தேவா என்பவர் தான் கொண்டு வந்திருந்த மூன்றரை அடி உயரம் உள்ள வைக்கோல் போரில் பேண்ட் சட்டை அணிய வைத்து செய்யப்பட்ட உருவபொம்மையை எரித்து எடப்பாடி வாழ்க எடப்பாடி வாழ்க என்று கோஷமிட்டார். விரைந்து வந்து கோட்டை போலீசார் ரோட்டில் எரிந்து கொண்டிருந்த உருவபொம்மையை அணைத்த பின்னர் கங்காதரன் என்ற தேவாவை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் நடத்திய விசாரணையில்… அதிமுகவின் தீவிர விசுவாசி என்றும், சினிமாவிற்கு கதை ஆசிரியராக ஆசைப்பட்டு கொண்டுள்ளதாகவும் கங்காதரன் என்ற தேவா தெரிவித்துள்ளார். இதனையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் உருவபொம்மையை எரித்ததற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
Comments