திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறும் மத்திய மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான நேரு தலைமையில் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
29ஆம் தேதி தமிழக முதல்வர் திருச்சிக்கு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தர உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கான கட்சி நிர்வாகிகள் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன திமுக கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்பினை வழங்கிய கழகத் தலைவர் தமிழக முதல்வர் அவர்களுக்கு கூட்டம் நெஞ்சார்ந்த நன்றியையும் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
திருச்சி மாவட்டத்தின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு காகித ஆலை இரண்டாவது கிளை துவக்க விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகின்ற 29ஆம் தேதி வியாழக்கிழமை அன்று திருச்சி வருகை தரவிருக்கும் முதல்வர் முதல்வர் மற்றும் இளைஞர் அணி செயலாளர் இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்று முதல் முதலாக திருச்சிக்கு வருகை தரவிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் விமான நிலையம் முதல் மணப்பாறையில் அமைந்துள்ள காகித ஆலை வரை திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அரசு விழாக்களில் பல்லாயிரக்கணக்கில் கழகத்தினர் கலந்து கொண்டு சிறப்பிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments