திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வ.உ.சி நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஜெயந்தி (32). இவர் துவாக்குடி நகராட்சியின் ஒன்றாவது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார்.
இந்த நிலையில் துவாக்குடி அண்ணா வளைவு அக்பர் சாலையை சேர்ந்த திமுக திருச்சி தெற்கு மாவட்ட அயலக அணி அமைப்பாளர் முகம்மது இலியாஸ்சை என்பவர் அந்த பகுதியில் பிரியாணி கடை மற்றும் பேன்சி ஸ்டோர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயந்திக்கும், முகமதுஇலியாஸூக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனை தொடர்ந்துஜெயந்தி முகமது இலியாஸிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதாகவும்,
அதற்கு முகமது இலியாஸ் தர மறுத்ததோடு ஆபாச வார்த்தைகளால் ஜெயந்தியை திட்டியதோடு துவாக்குடி அண்ணா வளைவில் பொது இடத்தில் வைத்து முகமது இலியாஸ் தான் அணிந்து இருந்த செருப்பை கழட்டி ஜெயந்தியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ஜெயந்தி துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது இலியாசை தேடி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments