Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நகர கழக செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. திமுக முதன்மை செயலாளரும், நகர்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு, முசிறி தொகுதி எம்.எல்.ஏ காடுவெட்டி தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது….. தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி கொண்டிருக்கிறது. திமுகவினருக்கு கூட எந்த வித சலுகையும் கிடைக்கவில்லை. பொதுமக்களுக்காக தான் இந்த ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. 

அதிலும் குறிப்பாக பெண்களுக்கு நமது முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் பேசுவதற்கு ஏதாவது ஒன்று தேவை என்ற நோக்கத்தில் பேசுகிறார்கள். காவல்துறை சிறப்பாக தமிழகத்தில் செயல்படுகிறது. அதிமுக ஆட்சியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது.

அதனை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டதற்கு அச்சம்பவம் குறித்து தனக்கு தெரியாது என்று கூறுகிறார். தொட்டியம் பகுதி காவிரியில் 11 கோடி மதிப்பில் கொரம்பு விவசாயிகள் நலனுக்காக அமைக்கப்பட உள்ளது. முசிறிக்கு பாதாள சாக்கடை திட்டம் தேவை என்றால் அதனையும் நிறைவேற்ற தமிழக அரசு தயாராக உள்ளது. தமிழக அரசுக்கு பொதுமக்களாகிய நீங்கள் என்றும் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், கே கே ஆர் சேகரன், பெரியசாமி, மாவட்ட அவைத் தலைவர் அம்பிகாபதி வழக்கறிஞர் பிரிவு அழகிரி, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதே போன்று திருச்சி மாவட்டம் துறையூர் மத்திய ஒன்றிய சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நரசிங்கபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார் கூட்டத்திற்கு வந்தவர்களை கிளைச் செயலாளர் கதிரேசன் வரவேற்றார். துணைவேந்தர் சபாபதி மோகன் சிறப்புரை ஆற்றினார்

துணைவேந்தர் பேசுகையில்…. திராவிட மாடல் என்பது சாமானியம் பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவருக்கும் சமத்துவம் வழங்குவது அடுப்பு ஊதிய பெண்கள் இன்று கல்வி கற்பது திராவிட மாடல் அரசின் சாதனை என்றும் கூறினார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகின்ற ஜூன் மாதம் முதல் அனைத்து தொடக்க கல்வி நிலையங்களிலும் காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

இதில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகள் பயன் அடைவார்கள் என்றும் தெரிவித்தார் அரசு பள்ளியில் படித்த 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிட தமிழக முதல்வர் அரசாணை வெளியிட்டுள்ளார் என்றும், எண்ணற்ற நல திட்டங்களை வழங்கிவரும் திராவிட முன்னேற்றக் கழக அரசு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40க்கும் 40 இடங்களை வெற்றி பெற வேண்டும். அதற்கு சாமானிய மக்களாகிய நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளரும் மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான தர்மன் ராஜேந்திரன், துறையூர் நகர செயலாளரும், திருச்சி மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவருமான மெடிக்கல் முரளி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ சரவணன், மேற்கு ஒன்றிய செயலாளர் வீரா என்கிற வீரபத்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் பேபி லெனின், எம்கே சுபாஷ், சதீஷ், வழக்கறிஞர் ஜெயராஜ், பி.சேகர் சரண்யா, மோகன் தாஸ், கஸ்டமர்ஸ் மகாலிங்கம்,

செல்வராணி, மலர் மண்ணன், புனிதா ரவிச்சந்திரன், அமுதா பெருமாள், அன்பு காந்தி, ராஜேந்திரன், விஸ்வநாதன், கே.ராஜேந்திரன், கார்த்திகேயன், பெரியசாமி, வரதராஜன் மற்றும் கிழக்கு மேற்கு மத்திய ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் நன்றி உரையாற்றினார்

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *