மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியபோது,
தமிழக முதல்வர் தனது உழைப்பை தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்காக செலவழிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒட்டுமொத்தமாக உழைத்ததன் காரணமாகத்தான் நம்பர் ஒன் முதல்வர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

தமிழகத்துக்கு மட்டும் உழைத்தால் போதாது வரும் காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் உழைக்கக்கூடிய தலைவராக உருவெடுக்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் சொல்லும் அளவிற்கு தனது உழைப்பை செலுத்திக் கொண்டிருக்கின்றார். உரிமைத்தொகை வழங்கப்படுமா? வழங்கப்படுமா? என்று எதிர்க்கட்சிகள் கேட்டபோது செப்டம்பர் 15ஆம் தேதி முதல் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பையும் இன்று அறிவித்து இருக்கின்றார். இன்று எதிர்க்கட்சியினர் இதைச் செய்தார்களா அதை செய்தார்களா என்று கேட்கிறார்கள்.

ஒரு மாணவன் பரிட்சை எழுதுவது என்று சொன்னால் அது 3 மணி நேரம் நடக்கும். ஆனால் ஒரு மணி நேரத்திலேயே நீ எழுதி விட்டாயா? எழுதி விட்டாயா? என்று என்று கேட்பது போல் உள்ளது எதிர்க்கட்சியிரின் கேள்வி. எங்களுக்கு பொதுமக்களாகிய நீங்கள் கொடுத்த வாய்ப்பு ஐந்து வருடம் ஆனால் இந்த இரண்டு வருடத்திலேயே 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளது. ஆனால் அதையே காரணமாக கூறாமல் எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்ற முடியுமோ அதையும் கண்டிப்பாக செய்து முடிப்போம். சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்பது கலைஞரின் ஸ்டைல் ஆனால் சொல்லாததையும் செய்வேன் சொல்லாமலும் செய்வேன் இதுதான் ஸ்டாலினின் ஸ்டைல் என்று சொன்னவர் தான் தமிழக முதல்வர். தமிழக முதல்வரின் திட்டங்களை ஆதரித்து அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும். சட்டமன்றம் இனி என்றும் திமுக தான் அடுத்த வருடம் நடக்கும் நாடாளுமன்றமும் நமதே என்ற அளவிற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள். என அவர் பேசினார். கூட்டத்தில் இல்லம்தேடி இளைஞரணி சேர்க்கை என்ற அடிப்படையில் புதிதாக கட்சியின் இணைந்த 1200 உறுப்பினர்களின் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் அமைச்சரிடம் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்டக் கழக நிர்வாகிகள் கோவிந்தராஜன், சபியுல்லா ஒன்றிய செயலார்கள் ராஜேந்திரன்,குணசேகரன், ராமசாமி, சீரங்கன், சின்னடைக்கண், செல்வராஜ், ஒன்றிய பெருந்தலைவர்கள் அமிர்தவள்ளி,குணா, நகர செ யலாளர் மு.ம.செல்வம், மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கனக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
13 Jun, 2025
388
04 April, 2023










Comments