திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள பொத்தமேட்டுபட்டியை சேர்ந்த பாத்திமா சகாயராஜ் (52) என்பவர் நகர நிலவரி தனி தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இதனிடையே இன்று எடத்தெரு பகுதியை சேர்ந்த கோபி (51) திமுக நகர பொருளாளராக உள்ள இவர், நிலவரி தாசில்தார் பாத்திமா சகாயராஜிடம் சர்வே எண் சமந்தமாக விளக்கம் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில் திமுக நகர பொருளாளர் கோபி, தனி தாசில்தார் சகாயராஜை வட்டாச்சியர் பலகையால் அடித்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அதே வளாகத்தில் உள்ள தாசில்தார், சார் பதிவாளர், கருவூலம், தனி வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட ஊழியர்களிடை பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து தனி தாசில்தாரை தாக்கிய திமுக பிரமுகர் மீது வருவாய்துறையினர் போலீஸில் புகார் அளித்தனர்.மேலும் சமந்தபட்ட திமுக பிரமுகரை கைது செய்ய வழியுறுத்தி அனைத்து வருவாய் துறை ஊழியர்கள் அலுவலக பணிகளை புறகணித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தாசில்தாரை தாக்கிய திமுக பிரமுகர் மீது மணப்பாறை காவல்துறையினர் 3 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments