கிராமப்புற மக்களின் முக்கிய வாழ்வாதாரமான 100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் வகையில் ஒன்றிய மோடி பாஜக அரசு தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய நிதியை நிறுத்தி உள்ளதை கண்டித்து தமிழக முழுவதும்
திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதன் தொடர்ச்சியாக திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய பழங்கனாங்குடி ஊராட்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்
கங்காதரன் தலைமையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டார் .ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்சபியுல்லா பொதுக்குழு உறுப்பினர் kkk.கார்த்திக் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும்
நூற்றுக்கணக்கான பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு தரவேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் முழக்கமிட்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments