மத்திய அரசை கண்டித்து இந்தி திணிப்பு, நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வையும் கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் எதிர்ப்பு போராட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி, மாணவரணி சார்பில் திருச்சி மாநகரில் இரண்டு இடங்களில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஹிந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக இளைஞரணி மாணவனை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்,மத்தி வடக்கு மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதே போல் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை பகுதியில் தெற்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர் .
தமிழகத்தில் இந்தி திணிப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசினர். திருச்சி அண்ணா சிலை பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தால் நடைபெற்றதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments