திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கண்டன உரையை கழக வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் இராகவ்பிரகாஷ் வழங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மக்களுக்கான ரேஷன் பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும். மேலும் காவிரி நீரை திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் 100க்கு மேற்பட்டோர் கோஷமிட்டனர்.
இதே போன்று திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் எதுமலை சாலை பிரிவில் திருச்சி வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ். குமார் மற்றும் வடக்கு மாவட்ட கழக பொருளாளர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள் தமிழகம் மற்றும் கர்நாடக அரசை கண்டித்து கண்டன உரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் வி.பி.தங்கமணி, டைல்ஸ்சுதாகர் மற்றும் ஜனனி ஆறுமுகம், ராஜா, மாவட்ட நிர்வாகிகள் சடகோபன், பார்த்திபன் , முருகேசன் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பாஸ்கரன், நகர துணை செயலாளர் சரவணன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments