தமிழக விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் மா.பா சின்னதுரை தலைமையில் சமூக ஆர்வலர்கள் உமர், பீர்முகமது ஆகிய மூவரும் இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாசலில் திருச்சி மாவட்டம், சோம்பரசன் பேட்டையில் FL2 வகை மதுபான கடை திறப்பதற்காக முயன்ற போது அதற்கு எதிராக போராட்டம் நடத்தி அந்த மதுபான கடையை மூடப்பட்டது.
தற்போது அந்தக் கடையை மீண்டும் திறப்பதற்காக திருச்சி மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். இதனை கண்டித்து அந்த மதுபான கடை மூடப்பட வேண்டும், தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காந்திய வழியில் தண்ணீர் அருந்தா உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக முதல்வர் ஆண்டுதோறும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் 2026க்குள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். ஆனால் தற்போது அந்த வாக்குறுதிகளை மறந்து மது, மாது, சூது நடத்தும் வகையில் FL2 வகையான மனமகழ் மதுபான கடைகளை திறப்பது கண்டனத்திற்குரியது.
இதனை எதிர்க்கும் வகையில் செயல்படும் என்னை திமுகவின் அந்தநல்லூர் ஒன்றிய சேர்மன் துரைராஜ் மற்றும் காஜாமலை விஜய் ஆகியோர் மிரட்டுகின்றனர். வீட்டுக்கு வந்து உங்களை சரி கட்டி விட்டு வரச் சொன்னார்கள் என்று என்னிடமே பேசுகிறார்கள். சாராயத்திற்கு அக்கறை காட்டி நாட்டை கொள்ளை அடிக்க திமுகவின் திட்டமிட்டு விட்டனர். எனவே, தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும், திருச்சியில் FL2 வகை மதுபான கடை திறக்க அனுமதி அளித்த மாவட்ட ஆட்சியரும் ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
Comments