சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலும், சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் திமுக மகளிர் அணியினர் சார்பாக 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Advertisement
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மண்டல பொறுப்பாளர் வைரமணி தலைமையில்
மாவட்ட மாநகர் மகளிரணி துணை செயலாளர் விஜயா ஜெயராஜ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதேபோல சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் திருச்சி தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஆர்ப்பாட்டத்தை எம்எல்ஏ அன்பில் மகேஷ் தலைமையில் மகளிர் அணி அமைப்பாளர் லீலா முன்னிலையில் நடைபெற்றது.
Advertisement
Comments