Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது – பாரதிய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த்கருனேஷ் திருச்சியில் பேட்டி

பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த்கருனேஷ் திருச்சியில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…. ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி பேசிய வார்த்தைகளை இந்தியா கூட்டணி திரித்தி பேசிய வருகின்றனர். இது தொடர்பாக விளக்கம் கொடுப்பதற்காக இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ராஜஸ்தானில் மோடி பேசியதை மாற்றி சொல்லாத பல விஷயங்களை சொல்லப்பட்டதாக காழ்ப்புணர்ச்சி உருவாக்க வேண்டும் என்ற தவறான கண்ணோட்டத்துடன் பேசப்படுகிறது. ஹிந்தியில் பேசியதால் அது தெளிவாக புரிந்து கொள்ளவில்லை. மொழிபெயர்ப்பு என்ற பெயரிலே புதிய புதிய அர்த்தங்கள் கற்பிக்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கிற வந்தேரிகள் எனக் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மையினரை அவர் குறிப்பிடவில்லை. வெளியில் இருந்து வந்து, ஆதாரமும் இல்லாமல் தங்கி இருக்கிறவர்களை மட்டுமே  அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் இஸ்லாமிய நாடுகளில் கூட அடைக்கலம் கொடுக்காமல் அவர்கள் மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்கு வந்தவர்களை குறிப்பிட்டு தான் அவர் சொல்லி இருக்கிறார்.

பிரதமர் தானாக பேசவில்லை முன்னாள் பிரதமர் மன்மோகன் என்ன பேசினார் என்பதன் விளக்கத்தை தான் அவர் பேசியுள்ளார். இந்த நாட்டின் சொத்து சிறுபான்மையினருக்கு குறிப்பாக இஸ்லாமியருக்கு என்று அவர் கூறியுள்ளார். அந்தப் பேச்சியும் இன்று நடப்பதையும் ஒன்றாகி இது போன்ற ஆபத்து வருவதற்கு முன்னால் தடுக்கப்பட வேண்டும், சொத்துக்கள் என்று பேசும் போது பெண்களின் தாலியை சேர்த்து அவர் சொல்கிறார். ஒரு புரிதலையும், விழிப்புணர்வையும் உருவாக்க வேண்டும் என்பது பிரதமரின் நோக்கம்.

தமிழகத்தில் மோடி என்ன ஹிந்தியில் சொல்லுகிறார் என்று புரிதல் இல்லை. எனவே திட்டமிட்டு இண்டியா கூட்டணியினர் விஷம பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தொடக்கத்தில் வந்த கருத்துக்கணிப்பில் வெற்றி பெறுவார்கள் என்று சொன்ன போதும் அதனை வைத்து எங்கள் கட்சியினர் அதை பெரிதுபடுத்தி பேசவும் இல்லை, திமுக தான் வரும் என்று சொன்னபோதும் துவண்டு போகவில்லை. தற்போது தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மலர்ந்து வருகிறத. எத்தனையாவது இடத்தைப் பிடிக்கிறோம், வாக்கு சதவீதம் என்ன என்பதுதான் எங்களுடைய இலக்கு.

எனவே, எங்களது தலைமையில் கூட்டணி அமைத்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம். திமுக, அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் காமராஜர் இருந்த காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை விட எந்த திட்டமும் இதுவரை கொண்டு வரப்படவில்லை. கருத்து உருவாக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. தமிழகத்தில் அச்சு ஊடகங்கள், ஒளிவுடகங்களும் ஒரே இடத்தில் இருக்கிறது. கருத்துருவாக்கத்தை செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். தமிழக அரசியலில் எல்லோரும் முட்டாள்தனமாக யோசிக்கிறார் என்று சொல்லலாமா என்ற கேள்விக்கு… நமது மாநிலத்தில் ஹிந்தியை தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் மோடி என்ன சொல்கிறார்கள் என்று புரிந்துள்ளது

வடநாட்டிலும் இதற்கு எதிர்ப்பு உள்ளது என்று தொடர் கேள்விக்கு… அது திட்டமிட்டு நடக்கக்கூடிய பிரச்சாரம் என்பதற்காக தான் இந்த புரிதலை நாங்கள் கொண்டு வருகிறோம்.2ம் கட்ட பிரச்சாரத்தில் மோடி இப்படி பேசுகிறார் தமிழகத்தில் ஏன் பேசவில்லை தேர்தல் பாதிப்பினால் அவர் பேசுகிறார் என்ற கேள்விக்கு…. தமிழகத்தில் பாதிப்பு என எடுத்துக் கொள்ள முடியாது. இழப்பதற்கு ஒன்றுமில்லை தமிழகத்தில் நாங்கள் உருவாக்குகிறோம்.தமிழ்நாடு முடிவு குறித்து கவலை இல்லை, தமிழ்நாடு தேவையும் இல்லை, தமிழ்நாடு இல்லாமல் நாங்கள் 420வதை பிடிப்போம் என ஏற்கனவே சொல்லிவிட்டார்.

தனியார் சொத்துக்கள் கணக்கிடப்படும் என ராகுல் காந்தி தெரிவிக்கிறார். இதற்காக தனியாக ஒரு கமிஷன் ஏற்படுத்தப்படும் என்கிறார். டைவர்சிட்டி கமிஷன் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது எப்படி செயல்படும் என்பது தான் கேள்வி. இதற்குத்தான் பிரதமர் எச்சரிக்கிறார். நைனார் நாகேந்திரன் 4 கோடி ரூபாய் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு…. சட்டம் தன் கடமையை செய்யட்டும். தனியாக நிற்காமல் கூட்டணி அமைத்து நிற்பது ஏன் என்ற கேள்விக்கு…. இதே கேள்வி திமுகவிடம் கேட்பீர்களா என்று எனக்கு தெரியாது.

திமுக தனது சொந்த காலில் என்றால் டெபாசிட் கூட வாங்காது. அவர்கள் தெளிவாக திட்டமிட்டு ஒரு கம்பெனி போல நடத்துகிறார்கள் என தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்ட தலைவர் ராஜசேகர், மாநி லம் நிர்வாகி புரட்சிக்கவிதாசன் உட்பட்ட பலர் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *