Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மத்திய அரசு கொண்டுவந்த வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமுமுக சார்பில் பேரணி

No image available

மத்திய அரசு கொண்டுவந்த வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமுமுக சார்பில் பேரணி மற்றும் பிஎஸ்என்எல் அலுவலக முற்றுகைப் போராட்டம் – 1200 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு

வக்பு திருத்தச்சட்டத்தை அமல்படுத்தி, வக்புசொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் செயல்படுவதாகவும், மத்திய அரசு கொண்டுவந்த வக்பு திருத்த மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி நாடுமுழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

நாடாளுமன்ற இருஅவைகளிலும் எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பை மீறி கொண்டுவரப்பட்ட வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், வக்பு திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடைவிதித்துள்ளது.

முஸ்லிம்கள் உரிமைகளையும், வக்பு சொத்துக்களை பறிக்கும் விதமாக அமைந்துள்ளதாக, இந்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மண்டலம் சார்பில் இன்று திருச்சியில் மாபெரும் பேரணி மற்றும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் சாலையில் இருந்து மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது தலைமையில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பேரணியாக வந்து பின்னர், பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மமக பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்..,மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டம் பாரம்பரிய சொத்துக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது, 115 உள்திருத்தங்களுடன், வக்பு ஒழிப்புச் சட்டம் என்று கூறும்வகையில் உள்ளது, என்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக பாரபட்சமான விதிகளை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது, உச்ச நீதிமன்ற அமர்வு இந்த சட்டத்திற்கு இடைக்காலதடை விதித்துள்ளது. அந்த உத்தரவை வரவேற்பதாகவும், உச்ச நீதிமன்றத்தை முழுமையாக நம்புவதாகவும், நாட்டில் அமைதி

 பாதிக்கப்படுவதுடன் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்கள் பறிக்கப்படுவதுடன், எங்கெல்லாம் பாசிச அமைப்புகள் மற்றும் ஆட்சிகள் இருக்கிறதோ அங்கு சிறுபான்மையின் மக்களின் அடையாளங்கள் சிதைக்கப்படும் ஆபத்து உள்ளதாகவும், எனவே இந்த வகுப்பு திருத்த சட்டத்தை அமல்படுத்த கூடாது என்றும், முழுவதுமாக திரும்பப்பெறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.அப்துல் சமது – பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *