கோடை வெயில் சுட்டெடுத்து வந்த நிலையில் தற்போது கோடை மழை தீவிரமடைந்துள்ளது தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் நீலகிரி வருவதை தவிர்க்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
இதே போல் தென்காசி மாவட்டத்திற்கு மே 17 முதல் 21ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் குற்றாலம் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என்பதால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி மற்றும் இதர அருவிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே மேற்கண்ட அருவிகள், அணை பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொது மக்கள் குளிக்க தடை விதித்து ஆணையிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments