Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மாஸ்க் போடாம என்.எஸ்.பி ரோடுக்குள்ள போயிடாதீங்க – 200 ரூபாய் ஸ்பாட் ஃபைன்!!

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 7 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் படிப்படியாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வரும் நவ.14ம்‌தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி ஆகிய பகுதிகளில் வணிக நிறுவனங்களும் ஜவுளி நிறுவனங்களும் அதிகமாக இருப்பதால், திருச்சியில் தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாக இது இருந்து வருகிறது. அதிகளவிலான மக்கள் கூடும் பகுதியாக இது இருப்பதால் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு காவல் ஆணையரின் அறிவுறுத்தலின் பேரில் இரவு பகல் பாராமல் களத்தில் நின்று காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அந்தவகையில் என்.எஸ்.பி ரோடு பகுதியில் “நோ மாஸ்க் நோ என்ட்ரி” என்ற விழிப்புணர்வு வாசகத்தை பொதுமக்களிடம் ஒலிபெருக்கி மூலம் காவல் துறையினர் தொடர்ந்து அறிவித்திக் கொண்டே வருகின்றனர். மேலும் முகக் கவசம் அணியாது செல்லும் பொதுமக்களை சிசிடிவி கேமரா வழியாகவும்  பல இடங்களில் போலீசார் நின்றும் உடனடியாக 200 ரூபாய் ஸ்பாட் ஃபைன் விதித்து வருகின்றனர். 

Advertisement

பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தனிமனித இடைவெளியுடன் முகக் கவசங்கள் அணிந்து செல்ல வேண்டுமெனவும், தங்களால் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் காவல்துறை வலியுறுத்திக் கொண்டே வருகின்றனர். 

எனவே தீபாவளி பண்டிகைக்காக என் எஸ் பி ரோடு சாலையில் செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இல்லையென்றால் கண்டிப்பாக 200 அபராதம்தான்! 

திருச்சி மாநகர காவல் துறையினர் எடுத்துள்ள இந்த கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பெரிதும் பாராட்டக்கூடிய ஒன்றாகும் என மக்கள் கூறுகின்றனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *