Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

2050 ஆண்டு சுற்றுச்சூழலை பாதுகாத்து 10 பில்லியன் பேருக்கு உணவளிக்க உங்களிடம் ஐடியா இருக்கிறதா? – பரிசுடன் களம் அமைத்து தரும் அமைப்பினர்!!

சுற்றுச்சூழலை எப்போதெல்லாம் மனிதன் தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்தி வருகிறானோ, அப்போதெல்லாம் இயற்கை மனிதர்களுக்கு தகுந்த பாடத்தை கற்று கொடுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் ஒவ்வொரு பேரழிவுகளிலும் இயற்கை ஒவ்வொரு பாடத்தை மனிதனுக்கு கற்பித்துக் கொண்டே வருகிறது. 

Advertisement

இனியும் மனிதன் வருகின்ற ஆண்டுகளில் தன்னுடைய சுயநலத்திற்காக இயற்கையை அழிக்க முற்பட்டான் என்றால் வருகின்ற ஆண்டுகள் மிகப்பெரிய பேராபத்தையும், பேரழிவையும் சந்திக்கக் கூடும் என்பதே நிதர்சனம். 

Advertisement

“வருமுன் காப்பதே சிறந்தது” என்பது போல தற்போது நடந்து வரும் சுற்றுச்சூழலுக்கு எதிரான காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு கருத்தில் கொண்டு எதிர்வரும் 2050ம் ஆண்டு 10 பில்லியன் பேருக்கு விவசாயம் செய்து உணவளிக்க உங்களிடம் ஐடியா இருந்தால் அதனை இந்த உலக அளவில் எடுத்துச் சென்று அங்கீகாரம் தர காத்திருக்கின்றனர் Thought For Food (TFF) அமைப்பினர்.

இந்த tff அமைப்பினர் கடந்த 8 வருடங்களாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். வருடா வருடம் இதுபோல் பொதுமக்களின் ஐடியாக்களை உலக அளவில் எடுத்துச் சென்று அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் பணியினை செய்து வருகின்றனர். அதேபோல இந்த வருடமும் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். 2050ம் ஆண்டு 10 பில்லியன் பேருக்கு உணவளிக்கும் வகையில் அப்போதைய சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு உங்களிடம் சிறந்த ஐடியாக்கள் இருக்கிறது என்றால் நீங்களும் இதில் கலந்து கொள்ளலாம். 

இதில் கலந்துகொள்ள வயது வரம்பு என்பது ஒரு தடை கிடையாது. உங்களிடம் சிறந்த ஐடியாக்கள் இருந்தால் யார் வேண்டுமானாலும் இதில் கலந்து கொண்டு பரிசுகளை பெற முடியும். இதில் நீங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகின்ற மே 28-ஆம் தேதி ஆகும். இதில் சிறந்த ஐடியாக்களை அனுப்பும் நபர்களுக்கு பரிசுகளும் மற்றும் பணத்தொகையும் வழங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு 9994558587 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசலாம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *