திருச்சி, பாலக்கரை அருகே, காஜபேட்டை பகுதியை சேர்ந்தவர் சையத் ஹசன் (40). யுனானி டாக்டரான அவர் வீட்டின் அருகே, தெருவில் நாய்க்குட்டி ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. சையத் ஹசன் வீட்டில் உள்ள குழந்தைகள், எலக்ட்ரிக் பைக்கை தெருவில் ஓட்டிய போது, நாய்க்குட்டி, அவர்களை துரத்தியுள்ளது.
குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில், நாய்க்குட்டி இருந்ததால், ஆத்திரமடைந்த சையத் ஹசன், அந்த நாய்க்குட்டியை தன்னுடைய ஏர்கன் மூலம் சுட்டுக் கொன்றுள்ளார்.
நாய்க்குட்டி குண்டு காயத்துடன் இறந்து கிடந்தது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர், பாலக்கரை போலீசில் புகார் செய்தனர். அதன்படி, போலீசார் விசாரணை நடத்தி, டாக்டர் சையத் ஹசனை கைது செய்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments