தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 19, 20 ஆகிய இரு நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சுற்றுவட்டார பகுதி முழுவதும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதில் பொதுமக்கள் தங்கள் உடமைகள் மற்றும் வீடுகளை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவி கரம் நீட்டும் வகையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் சமூக நலச் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. குறிப்பாக தூத்துக்குடி அண்ணா நகர் டவுன் மற்றும் ஏரல் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments