உலகை அச்சுறுத்தும் கொரோனா இரண்டாம் அலையில் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் நோய்தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் 42 மருத்துவர்கள், இந்தியா முழுவதும் இதுவரை 1,427 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நோயாளிகளின் உறவினர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்தி உள்ள மருத்துவர்கள் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, மருத்துவர்களின் பாதுகாப்பிற்கு வலிமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனை மற்றும் மருத்துவத்துறைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனைக்கும் உறுதியான பாதுகாப்பு வேண்டும். மருத்துவமனையைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் விரைவாகவும், பெயிலில் வர முடியாதவாறு கடுமையாகவும் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இந்திய மருத்துவ கழகத்தின் திருச்சி கிளையில் மருத்துவர்கள் கறுப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு இடையூறு இன்றி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments