Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கொரானா நோயாளிகளின் ஆக்சிஜன் தேவையை குறைக்க உதவுகிறதா கதிரியக்க சிகிச்சை முறை

திருச்சியில் ஹர்ஷமித்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற்றுநோய் மையம் நாட்டிலேயே முதன்முறையாக கோவிட் 19க்கு எதிராக குறைந்த அளவிலான கதிர்வீச்சு சிகிச்சை இரண்டாம் கட்ட சோதனையை நடத்தி உள்ளனர். இதன் ஆரம்பகால சோதனை முடிவுகளை ICMR  மற்றும் CTRIன் ஒப்புதல் பெற்றுள்ளனர். குறைந்த கதிரியக்க சிகிச்சை மூலம் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் அளவு 48 மணி நேரத்துக்குள் பாதி அளவாக குறைவது சிகிச்சையின் முதல் வெற்றி எனலாம்.

வின்கோவிட்-19 என பெயரிடப்பட்ட இந்த சோதனை அக்டோபர் 2020 ICPM  மற்றும் CTRIல் பதிவு செய்யப்பட்டது. இதுவரை 50 நோயாளிகளை கொண்டு சோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் 25 நோயாளிகளிடமிருந்து முடிவுகள் கதிர்வீச்சு சிகிச்சையின் ஒரு டோஸ் கிடைத்த 48 மணி நேரத்திற்குள் ஆக்ஸிஜனேற்ற நிலையில் விரைவான முன்னேற்றத்தை காட்டியுள்ளன. மீட்பு சதவிகிதம் 88 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரானா நோயாளிகளுக்கு  குறைந்த கதிரியக்க  சிகிச்சை எவ்வாறு பயனளிக்கிறது?

இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் கோவிந்தராஜ் சிகிச்சை பற்றி அளித்துள்ள  விளக்கங்கள்… கொரனோ நோயாளிகளுக்கு அரசால் பின்பற்றப்படும் எந்த ஒரு வழிகாட்டு சிகிச்சையையும் மறுக்காமல் வழக்கமான சிகிச்சையையோடு குறைந்த அளவிலான கதிரியக்க சிகிச்சையை வழங்கப்படும்.
LDRT சிகிச்சை வைரஸுக்கு எதிராக வேலை செய்வதில்லை, இது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் செயல்படுகிறது. சைக்டோகைன் புயல் எனப்படும் நோய் எதிர்ப்பு அதிகப்படியான எதிர் விளைவு காரணமாக பெரும்பாலான கோவிட் மரணங்கள் நிகழ்கின்றன.

 

குறைந்த கதிரியக்க சிகிச்சை ஒரு அழற்சி எதிர்ப்பு விளைவை கொண்டு வருகிறது. இதில் மேக்ரோபேஜ்  எனப்படும் அழற்சி செல்கள்  மீது செயல்படுகிறது. மேக்ரோ பேஜ் இரண்டு வகைகள் உள்ள அழற்சி சார்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு. குறைந்த அளவிலான கதிரியக்க சிகிச்சை அழற்சி சார்பு மேக்ரோபேஜ்களை குறைக்கிறது மற்றும் அழற்சி எதிர்ப்புமேக்ரோபேஜ்களை அதிகரிக்கிறது.

சோதனை இப்போது ஆய்வு கட்டத்தை நிறைவு செய்துள்ளது மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை எந்த ஒரு கடுமையான நச்சுத்தன்மை தொடர்புபடுத்தப்படவில்லை மற்றும் ஆக்ஸிஜனேற்ற நிலையில் விரைவான முன்னேற்றம் மற்றும் நோயாளிகளின் நல்வாழ்வில் விரைவான முன்னேற்றத்துடன் தொடர்புடையது என்பது கண்டறியப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படும் கதிர்வீச்சின் அளவு 0.5GY இது குறைந்த அளவிலான கதிரியக்க சிகிச்சை என அழைக்கப்படுகிறது. இது புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கதிர்வீச்சின் நூறில் ஒரு பங்கிற்க்கும் குறைவானது. 

ஆரம்ப முடிவுகள் 8-10 லிட்டர் ஆக்ஸிஜன் தேவைப்படும் பெரும்பாலான நோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சையின் 48 மணி நேரத்திற்குள் 4-5 லிட்டர் மட்டுமே தேவைப்படுகிறது. ஆய்வில் பெரும்பாலான நோயாளிகள் நான்கு முதல் ஐந்து நாட்களில் சுற்றுப்புற காற்றினை சுவாசிக்கும் வகையில் பயனளிக்கிறது.

அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகம் மற்றும் புது தில்லியின் எய்ம்ஸ், கடந்த ஆண்டு அவர்களின் முதல் கட்ட சோதனைகளின் ஆரம்ப முடிவுகளை வெளியிட்டன. WINCOVID-19 சோதனை இப்போது ஒப்பீட்டு கட்டத்தில் உள்ளது, இது கதிர்வீச்சால் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் அதனுடன் சிகிச்சையளிக்கப்படாதவர்களுக்கும் இடையிலான விளைவுகளின் வித்தியாசத்தை மதிப்பிடுகிறது.

இந்த குறைந்த கதிரியக்க சிகிச்சை முறை 1900ளில் நிமோனியா வைரஸ்க்கு எதிராக பயன்படுத்தப்பட்டு நோயாளிகளை குணப்படுத்துவதில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த சிகிச்சை முறை உலகங்களிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டது. தற்போது அதே முறையை கோவிட் நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்கான ஆய்வுகள் நிறைவடைந்ததை அடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/L02NDTkd6Wg4hHDkNo6EQC

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *