திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில், குற்றங்கள் நடைபெறா வண்ணம் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்தும், குற்றம் நடக்கும் இடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, சமுதாய குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு, 160 முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டு அவ்விடங்களில் வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பொதுமக்களை, அந்தந்த சரக காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் போலீசார் சந்தித்து, காவல்துறையினர் பகுதி ஆதிக்கம் செய்து மற்ற குற்றவாளிகள் ஆதிக்கம் செலுத்தாத
வகையில், அதுதொடர்பான சமுதாய குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் அவர்களிடம் நேரடியாக கலந்துரையாடி, அவர்களிடம் நிலவி வரும் சூழ்நிலைகள் தொடர்பான பிரச்சனைகளை கேட்டறிந்து, அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் திருச்சி மாநகர போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்கள்.
அதன்பேரில், நேற்று 30.10.2021-ம்தேதி திருச்சி மாநகரம், ஸ்ரீரங்கம் காவல் சரக எல்லைக்குட்பட்ட மேலக்கொண்டையம்பேட்டை, நடுகொண்டையம்பேட்டை, தேவதானம், ஓயாமரி ஆகிய பகுதிகளில் ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் தலைமையிலும், கண்டோன்மெண்ட் காவல் சரக எல்லைக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையம் மற்றும் வ.உ.சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கண்டோன்மெண்ட் சரக காவல் உதவி ஆணையர் தலைமையிலும்,
கே.கே.நகர் காவல் சரக எல்லைக்குட்பட்ட எல்.ஐ.சி. காலனி, தென்றல் நகர், கே.கே.நகர் பேருந்து நிறுத்தம் மற்றும் மிலிட்டரி கிரவுண்ட் பகுதியில் கே.கே.நகர் சரக காவல் உதவி ஆணையர் தலைமையிலும், பொன்மலை காவல் காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியான கம்பிகேட், தங்கேஸ்வரிநகர், அரியமங்கலம் லெட்சுமிபுரம் பகுதிகளில் பொன்மலை சரக காவல் உதவி ஆணையர் தலைமையிலும், காந்திமார்க்கெட் காவல் சரக எல்லைக்குட்பட்ட வரகனேரி, விஸ்வாஸ் நகர், கீரைக்கடை பஜார், எடத்தெரு, சங்கிலியாண்டபுரம், காஜாபேட்டை மற்றும் முதலியார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் காந்திமார்க்கெட் சரக காவல் உதவி ஆணையர் தலைமையிலும் மற்றும் தில்லைநகர்
காவல் சரக ஆழ்வார்தோப்பு, டாக்கர்ரோடு, மகாத்மாகாந்திபள்ளி சந்திப்பு, தென்னூர் உள்ளிட்ட பகுதிகளில் தில்லைநகர் சரக காவல் உதவி ஆணையர் தலைமையிலும் போலீசார் அந்தந்த பகுதிகளில் பகுதி ஆதிக்கம் (Area Domination) செய்து பொதுமக்களை சந்தித்து அப்பகுதியில் உள்ள குறைகள், குற்ற சம்பவங்கள், அங்குள்ள பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தனர். பொதுமக்கள் காவல்துறையினரிடம் பகுதி ஆதிக்கம் செலுத்தும்போது, ரவுடிகளின் ஆதிக்கம் குறையும் என்றும், குற்றச் சம்பவங்கள் நடைபெறாது என்றும், காவல்துறையினர் தினமும் வரவேண்டும் என்று கூறினார்கள்.
இதுபோன்று, திருச்சி மாநகரில் சமுதாய குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, கண்டறியப்பட்ட 160 இடங்களில், தினசரி அந்தந்த காவல் உதவி ஆணையர்கள் தலைமையில்; சம்மந்தப்பட்ட ஆய்வாளர்கள், போலீசார்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து, அவர்களிடம் கலந்துரையாடல் செய்து, அந்த பகுதியில் வசித்துவரும் குறிப்பிட்ட தரப்பினரோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தினரோ ஆதிக்கம் ஏதும் செலுத்தாத வகையில் காவல்துறையினரால் ஆதிக்கம் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision
Comments