திருச்சி மாநகராட்சி எடமலைப்பட்டிபுதூர் 39-வது வார்டு கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த 2004ம் ஆண்டு போடப்பட்ட சாலை பராமரிப்பு இல்லாமலும், புதிப்பிக்கப்படாமலும் இருந்து வந்தது. இந்த சாலை எடமலைப்பட்டிபுதூர் சோதனைச்சாவடியில் இருந்து உள்ளே கிருஷ்ணாபுரம் வரை செல்லும். கடந்த 17 வருடங்களாக சரி செய்யப்படாமல் குண்டும் குழியுமான, சாலையில் வாகன விபத்துக்கள் ஏற்படுவதும் பள்ளமான பகுதியாக இருப்பதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து சிரமத்தை வேதனை தெரிவித்து வந்தனர்.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் பலமுறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு கொடுத்தும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நிறைவுற்றவுடன் இவற்றை சரி செய்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதி இளைஞர் ஒருவர் தெரிவிக்கையில்…மாநகராட்சியின் கடைசி பகுதியாக இது இருப்பதால் பாதாள சாக்கடை இங்கு வந்துதான் முடியும். எனவே அதிகாரிகளிடம் எங்கள் பகுதி யூத் அசோசியேஷன் சார்பாக மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. எனவே எங்கள் பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து இப்பணியை செய்தோம்” என்றார்
இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் இப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களிடம் தங்களால் முடிந்த நன்கொடையை உதவுமாறு கேட்டு ரூபாய் 8000 மதிப்பில் இந்த சாலையை சீரமைத்து உள்ளனர். 17 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலையை அதிகாரிகள் சரி செய்யாததால் இளைஞர்களே பழுதுபார்த்தது அப்பகுதியில் பாராட்டைப் பெற்று வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய…Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
Comments