திருச்சி கடியாக்குறிச்சி குடிநீரேற்று நிலையத்திலிருந்து 76 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் இரண்டு நாட்களாக தடைபட்டுள்ளது. திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குடமுருட்டயிலிருந்து ஜூயபுரம் வரை சாலை விரிவாக்கம் பணியின் போது அடிக்கடி நெடுஞ்சாலைத்துறையினர் குடிநீர் இணைப்பு குழாய்களை உடைத்து விடுவதும் மீண்டும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அதனை சரி செய்வதுமாக இருந்து வந்தனர்.
Advertisement
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் 76 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தலையிட்டு குடிநீர் வடிகால் வாரிய துறையுடன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Advertisement
Comments