Advertisement
திருச்சி திருவள்ளுவர் நகர் முத்துமாரியம்மன் கோவில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.
Advertisement
இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து மருந்து வழங்க கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது வரை 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே சொட்டுமருந்து போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கோயிலுக்கு அருகே மேல்நிலை நீர்தேக்க தொட்டி பகுதியில்தான் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்தப் பகுதி தனி நபர் ஒருவரின் கோயில் ஆக்கிரமிப்பு பகுதியாக மாறியுள்ளது.
இதனால் சொட்டு மருந்து கோயில் முன் வைத்து வழங்கப்படுகிறது. பொதுமக்கள் கோயிலுக்குள் சென்று சொட்டு மருந்து போடுவது அச்சப்படுகிறார்கள். இந்த பகுதியில் திருவள்ளுவர் நகர், கலைஞர் தெரு, இந்திரா தெரு, வ உ சி தெரு, கணபதி நகர், பர்மா காலனி, காந்திஜி தெரு, நேதாஜி தெரு உள்ளிட்ட பகுதிகளில் அரசு இடங்களில் மட்டுமே அல்லது பொது இடங்களிலோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.
இது போன்று தனியாருக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போடுவதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். தனிநபர் ஒருவரின் ஆக்கிரமிப்பு பிடியில் இருக்கும் பகுதிகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Comments