Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தொழில் நஷ்டம் ஏற்படுத்தியதாக நகை கடை ஊழியரை கொலை செய்து புதைத்த டிரைவர் கும்பல் கொடூரம்

திருச்சி – கரூர் சாலையில் அண்ணாமலை நகரில் பிரபல நகைக்கடை உள்ளது. இந்த கடையில் விற்பனைக்காக புதிய நகைகள் வாங்க  ஊழியர் மார்ட்டின் ஜெயராஜ் திருச்சியிலிருந்து வாடகை காரில் சென்னை புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் நகைகளை வாங்கிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு அதே வாடகை காரில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது தாம்பரம் அருகே வந்து கொண்டிருந்த மார்ட்டினிடம் கடையில் உரிமையாளர் கைபேசிக்கு அழைத்து பேசி உள்ளார்.

இதனையடுத்து நள்ளிரவில் மீண்டும் கடை ஊழியர் மார்ட்டினின் கைபேசிக்கு உரிமையாளர் தொடர்பு கொண்ட போது ஸ்சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. நகைகளுடன் வந்து கொண்டிருந்த மார்ட்டினுக்காக காத்திருந்த உரிமையாளர் விடிந்தும்  வராததால் கடை ஊழியர்களுடன் மார்டினை தேடி சென்னையை நோக்கி சென்றுள்ளார். அப்போது பெரம்பலூர் அருகே சென்ற மார்ட்டின் ஜெயராஜ் குறித்து தகவல் கேட்டறிந்தனர்.  பின்னர் வாடகை கார் ஓட்டுநரிடம் மார்ட்டின் குறித்து கேட்டதற்கு முன்னுக்கு பின் முரானான பதிலளித்தால் ஓட்டுநரை திருச்சி அழைத்து வந்து உறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பெரம்பலூர் அருகே காரில் வரும் போது பிரசாந்த் என்பவர் தலைமையில் 6 பேர் கும்பல் மார்ட்டினை கொலை செய்துள்ளனர். மேலும் திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழசாலையிலுள்ள பிரசாந்த் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்  நகை கடைக்கு தேவையான நகைகளை வாங்குவதற்காக மார்ட்டின் ஜெயராஜ் வாடகை கார் வைத்திருக்கும் பிரசாத் என்பவரை அழைத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் பிரசாந்தின் ஏமாற்று வேலையை கண்டறிந்து இதுகுறித்து கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதனால் வாடகை கார் புக் செய்வது முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் தனது தொழிலுக்கு நஷ்டம் ஏற்படுத்திய மார்ட்டினை திட்டமிட்டு 6 பேர் (டிரைவர்கள்) கொண்ட குழு அவரை கொலை செய்து மண்ணச்சநல்லூரில் புதைத்துள்ளனர்.

இதனையடுத்து இன்று காலை வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை முன்னிலையில் அவரது உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தபடும் என போலீசார் தெரிவித்துள்ளனர். தொழிலில் நஷ்டம் ஏற்படுத்த காரணமாக இருந்த நகை கடை ஊழியரை கொன்று புதைத்து நாடகமாடியது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *