Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வாகன ஓட்டிகளே ஜாக்கிரதை!தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணியாதவர்களை கண்டறிந்து தானாக வழக்கு பதிவு செய்யும்கேமராக்கள்

திருச்சியில் தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணியாதவர்களை கண்டறிந்து தானாக வழக்கு பதிவு செய்யும் அதிநவீன மாநகர் முழுவதும் 29 கேமராக்கள் -வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை .

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து விதிகளை மீறி பயணம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.அதன்படி திருச்சி மாநகரில் உள்ள 9 சோதனை சாவடிகளில் (Check post) மாநகருக்குள் உள்வரும் மற்றும் மாநகரை விட்டு வெளியேறும் வாகனங்களில்

தலைக்கவசம் அணியாமல் செல்வோர் மற்றும் 3 நபர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணிப்பர்கள் மீது தானாக படம் பிடித்து தானியங்கி வாகன எண் அடையாளம் காணும் தொழில்நுட்ப கேமரா மூலம் (ANPR) வழக்கு பதிவு செய்யும் விதமாக சுமார் 21 (Automatic Helmet Violation – ANPR) அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கார்களில் சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்பவர்களை கண்காணித்து, அவர்களின் வாகனங்களின் எண்களை படம் பிடித்து (ANPR) வழக்கு பதிவு செய்யும் விதமாக CP.1 கருமண்டம், CP.2 பஞ்சப்பூர் ஜங்சன், CP.4 அரியமங்கலம், CP.7 கோட்டை உட்பட 6

 இடங்களில் (Automatic Seat Belt Violation ANPR) அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாநகரில் மேலபுலிவார் ரோடு மற்றும் ராமகிருஷ்ணா பாலம் ஆகிய 2 இடங்களில் ஒருவழி பாதையில் விதிகளை மீறி செல்வோர்கள் மீது தானாக வழக்கு பதிவு செய்யும் விதமாக (Automatic No Entry Violation Verifocal camera-க்கள்) என பொருத்துப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் புதியதாக பொருத்துப்பட்டுள்ள 29 அதிநவீன உயரக கேமராக்கள் மற்றும் 10 உடலில் அணிந்த கேமராக்கள் (Body Worn Camera) இன்று 11.06.2025-மாநகர காவல் ஆணையர் காமினி மாநகர நவீன காவல்கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடங்கி வைத்தார்.

மேலும் புதிய கேமராக்கள் அனைத்தும் சிறப்பு மென்பொருள் (Software) மூலம் இணைக்கப்பட்டு திருச்சி மாநகர நவீன காவல்கட்டுப்பாட்டு அறையில் இருந்து நிகழ்வுகளை நேரடியாக கண்காணிப்படும் எனவும், மேலும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களை கண்டறிந்து அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *